Sunday, February 13, 2011

என் அம்மா - மகன் அன்னையைப்பற்றி புகழ்ச்சி பாடல்


என் அம்மா அக்கா நண்பன் எல்லாம் நீ
தனக்கென்று எந்த சந்தோஷமும் அறியாதவள் நீ
மகன்களும் குடும்பமும் தான் வாழ்க்கை என்று வாழ்பவள் நீ
தனக்கென்று ஒரு பொருளும் வாங்காதவள் நீ
மகன்களுக்கும் குடும்பத்துக்கும் அனைத்தும் செய்பவள் நீ

ஒருவனிடம் உன் நெருங்கிய நண்பன் யாரென்றால்
அவனொரு பையனோ பெண்ணோ என்றே சொல்வான்
என்னிடம் உன் நெருங்கிய நண்பன் யாரென்றால்
யோசிக்காமல் நான் சொல்வது உன் பெயர் தான்

இது உனது ஐம்பத்து ஐந்தாம் ஆண்டு; யோசித்தால்
நான் உன்னுடன் இருக்கும் இறுபத்து ஒன்பதாம் ஆண்டு
இன்றும் உன்னுடன் பேசுகையில் மறைகிறது என் வயது 
காரணம் குழந்தைபோல் நீ  என்னை நடத்துவது 

யோசித்து பார்த்தால் கண்கள் நீரூற்றாகிறது
பள்ளி நாட்களில் இரக்கமில்லாத சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் 
மதிய உணவு சுமந்து கொண்டு தினமும் நீ வந்தாய்
மாலை மறுமுறை எங்களை அழைத்து செல்ல நீ வந்தாய்
பல ஆண்டு காலம் நீ இதை செய்தாய்
எவர் செய்வார் இப்படித் தன் குழந்தைகளுக்கு 
சொல்லபோனால் நீ கிடைத்தது வரம் எங்களுக்கு

எனக்கென்று நீ செய்தது எண்ணிள்ளடன்காத ஏராளம்
இன்ஜினியரிங் கல்லூரி கலந்தாய்வுக்கு வந்தாய்
கல்லூரி சந்தா கட்டவும் நீ வந்தாய்
கல்லூரி காலத்தில் பணம் செலுத்த நீ 
ஏற்ற கடினம் மறவாது எந்தன் மனம்

என் வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்
நீ இல்லையென்றால் என் வாழ்வாகியிருக்கும் விக்கல்
எப்படி நன்றி சொல்வேன் உனக்கு
ஈடாகாது எத்தனை கோயில் கட்டினாலும் உனக்கு
அத்தனை தெய்வமும் கலந்த ஓரு உருவம் நீ எனக்கு

என் முதல் வேலை என் முதல் சம்பளம்
என் முதல் வெளிநாட்டு பயணம்
இவையனைத்திலும்  எனைவிட ஆனந்தம் அடைந்தது நீ
மறுபிறவி இருந்தால் என் தாயாக வேண்டும் நீ
கடுவுளே எனக்கு இவ்வரம் தந்திடு நீ

பாசம் கொடுத்தாய் படிப்பை கொடுத்தாய்
குணத்தை கொடுத்தாய் பண்பை கொடுத்தாய்
எனக்கு உன் அழகை கொடுத்தாய்
பதிலுக்கு நானென்ன கொடுப்பேன்
என்ன கொடுத்தாலும் இதற்கு இடாகுமா?

வாரந்தோறும் வியாழக்கிழமை மனமடைகிறது சந்தோஷம்
உன்னோடன் தொலைபேசியில் பேசலாம் என்ற காரணத்தால்
எப்பொழுது உன்னுடன் பேசினாலும் உன் வார்த்தையில் 
என் தனிமை மறைகிறது என் சோகம் ஓடுகிறது
சந்தோஷத்தில் மனம் துள்ளி குதிக்கிறது

என் படிப்பு என் பதவி என் பொருள்
என் புகழ் என் பெருமை என் அந்தஸ்து
அத்தனைக்கும் மூல காரணம் நீ
நான் அறியாமல் எதேனும் தவறு செய்திருந்தால்
மன்னித்து ஏற்று கொள்ளவேண்டும் நீ

நோய்நொடி இல்லாமல் நீ பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டிகொள்கிறேன் இத்திருநாளில்
பல்லாண்டு பல்லாண்டு நீ வாழ வேண்டும் 
என் குழந்தைகளும் பேர குழந்தைகளும் நீ வளர்க்க வேண்டும்
உன்னால் நம் குடும்பம் மென்மேலும்  பெயர் எடுக்க வேண்டும்
உன்னால் நம் குடும்பம் மென்மேலும் சந்தோஷமடைய வேண்டும்

- கோபு கவிதைகள்!